மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.54 கோடி கல்விக் கடன் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சு.வெங்கடேஷ் எம்.பி கூறியுள்ளார். இது குறித்து அவர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் கல்வித்துறை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில் கூடுதல் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி மதுரை மாவட்டத்தில் இதுவரை கல்வி கடன் கேட்டு […]
