Categories
உலக செய்திகள்

அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கு சுவிஸ் ஒப்பந்தம்.. அரசு வெளியிட்ட அறிக்கை..!!

சுவிட்சர்லாந்து, அமெரிக்க அரசிடமிருந்து F-35 வகை போர் விமானங்களை வாங்குவதற்கு தீர்மானித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு கடந்த புதன்கிழமை அன்று தங்கள் ராணுவம் அடுத்த தலைமுறை போர் விமானம் என்று F-35 Lightning II-ஐ தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. Lockheed Martin என்ற அமெரிக்காவின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் F-35 Lightning II எனும் அதிநவீன பைட்டர் ஜெட்களை உருவாக்குகிறது. சுவிட்சர்லாந்தின் பெடரல் கவுன்சில், 5 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் கொடுத்து, F-35A வகை போர் விமானங்கள் 36 வாங்குவதற்கு […]

Categories
உலக செய்திகள்

இதனாலதான் வேண்டான்னு சொல்றோம் ….. கால்பந்து ரசிகர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள் ….!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் முதல் முறையாக சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜூன்  11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து அணி ஸ்பெயின் அணிக்கு எதிராக விளையாடும் போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெறுகிறது. ஆனால் தற்போது அங்கு கொரோனா தொற்று  பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை புதிதாக 1503 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுவிட்சர்லாந்து […]

Categories
உலக செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட கிராமம்.. மக்கள் செய்த காரியம்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு கிராமம் கடந்த வாரத்தில் ஏற்பட்ட புயலால் கடும் பாதிப்படைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள Neuchatel என்ற மாகாணத்தில் இருக்கும் Cressier என்ற கிராமத்தில் கடந்த வாரம் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதில் பல வீடுகளில் பெருவெள்ளம் புகுந்து சகதி ஏற்பட்டு, வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கிராமத்திலுள்ள மக்களே, அந்த வீடுகளை சுத்தம் செய்து, அவர்களுக்கு குடிக்க தண்ணீர் அளித்து, துணிகளை துவைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தின் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் …. பொதுச்சபைக் கூட்டதில் நிர்வாக சபை தேர்ந்தெடுப்பு …!!!

 சூக் கூனன் பேர்க் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 2021 ஆம் ஆண்டுக்கான பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் சூக் கூனன் பேர்க் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 2021 ஆம் ஆண்டுக்கான  பொது சபை கூட்டமும் ,நிர்வாக சபைத் தேர்வும்  நடைபெற்றது. இதற்கு தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார். இந்த பொது சபை கூட்டத்தின்போது ஆலய குரு பாஸ்கரன் அவர்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜையும் ஆசியுரையும் நிகழ்த்தினார் .இதனைத் தொடர்ந்து தலைவர் தர்மராஜா சுதாகர் […]

Categories
உலக செய்திகள்

வயதான தம்பதியரின் பயணம்.. 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்த வாகனம்.. அதிர்ஷ்டவசமாக நடந்த செயல்..!!

சுவிட்சர்லாந்தில் வயதான தம்பதியர் வாகனத்தில் சென்றபோது 50 மீட்டர் பள்ளத்தில் விழுந்து லேசான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள Graubünden என்ற மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று Valtoris பகுதி வழியே, 87 வயதுடைய முதியவர், 84 வயதான தன் மனைவியுடன் மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஒரு ஊசி வளைவில் திரும்பும்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை தாண்டி சுமார் 50 மீட்டர் குழியில் விழுந்திருக்கிறது. இதில் அந்த முதியவரின் மனைவி லேசான காயங்களுடன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி முழு டோசும் போட்டவர்களுக்கு …. தளர்வுகளை அறிவித்த சுவிட்சர்லாந்து …!!!

கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்டவர்கள் அல்லது பாதிப்பிலிருந்து குணமடைந்த பயணிகளின்  வருகைக்கு சுவிட்சர்லாந்தில் சில தளர்வுள் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்டவர்கள் அல்லது பாதிப்பிலிருந்து குணமடைந்த நபர்களாக இருப்பவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு அந்நாட்டு அரசு சில தளர்வுகளை  அறிவித்துள்ளது . அதன்படி அவர்கள் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற […]

Categories
உலக செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு அனுமதி.. சுவிட்சர்லாந்து அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்து அரசு, தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்திக்கொண்ட இந்திய மக்களுக்கு தன் நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது. உலக நாடுகளில் முதன் முதலாக சுவிட்சர்லாந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்திய மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும்  தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும்போது, பிசிஆர் முறையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் காட்ட வேண்டிய தேவையில்லை. எனினும் விமானத்தில் பயணிக்கும் போது சான்றிதழ் அவசியம். இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே […]

Categories
உலக செய்திகள்

படகு சவாரிக்கு தனியாக சென்ற நபர்.. குடும்பத்தினரின் கண்முன்னே திடீர் மாயம்.. தேடுதல் பணி தீவிரம்..!!

ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரபல ஏரியில் காணாமல் போன நபரை சுவிட்சர்லாந்து உட்பட மூன்று நாடுகளை சேர்ந்த காவல்துறையினர் 23 படகுகளில் தேடி வருகிறார்கள். போலந்து நாட்டை சேர்ந்த 60 வயதுடைய நபர் தன் குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, ஜெர்மனிக்கு வந்துள்ளார். அப்போது அவர் மட்டும் Constance என்ற ஏரியில்  படகு சவாரி செய்ய தனியாக சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் அவரின் குடும்பத்தார் பார்வையிலிருந்து மாயமாகிவிட்டார். உடனடியாக, அந்த நபரின் மகன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சுரங்கப்பாதையில் நின்ற ரயில்.. 600 பயணிகள் பரிதவிப்பு.. காரணம் என்ன..?

ஆல்ப்ஸ் மலையின் இடையில் செல்லக்கூடிய சுரங்க ரயில் பாதை ஒன்றில், ரயில் பழுதடைந்ததால் 600 பயணிகள் மாட்டிக்கொண்டனர். Gotthard சுரங்க ரயில் பாதையில் நேற்று இரவில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பாதி வழியில் ரயில் பழுதடைந்து நின்றிருக்கிறது. இதில் 600 பயணிகள் பரிதவித்து நின்றுள்ளனர். எனவே பயணிகள் அனைவரையும் இறங்குமாறு அறிவுறுத்தி சுரங்க பாதைக்கு வெளியில் அழைத்துச்செல்ல தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வேறு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் இளம்பெண்ணை துன்புறுத்திய மூவர்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு இளம்பெண்ணிடம் மூன்று நபர்கள் சேர்ந்து தவறாக நடந்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஸல் நகரில் நள்ளிரவில் சுமார் ஒரு மணிக்கு ஒரு இளம்பெண் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது 3 நபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றனர். அதன் பின்பு அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற இருவர் அந்த நபர்களிடம் விசாரித்த சமயத்தில் அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி புதருக்குள் சென்று மறைந்துள்ளார். அங்கிருந்து, தன் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சி மட்டும் ரத்து.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் வருடந்தோறும் நடந்துவரும் ஒரு இசை நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் The Montreux Jazz Festival என்ற இசை விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான இசை நிகழ்ச்சியில் பிரிட்டன் இசைக்கலைஞர்கள் Alfa Mist, Rag’n’Bone Man மற்றும் Inhaler போன்றோரின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் தற்போது பிரிட்டனில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் தேவையா..? மக்களின் கருத்து என்ன..? வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்து மக்கள் ஒரு வருடத்திற்கும் அதிகமாக முகக்கவசம் அணிந்து வந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் முகக்கவசம் கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெடரல் கவுன்சில் கடந்த புதன்கிழமை அன்று இத்தீர்மானம் கொண்டுவந்தது. அதில் முகக்கவசம் இனி கட்டாயம் அணியத்தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிவிப்புக்கு பின்பு மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில்  நாட்டு மக்களில் கால்பகுதியினர், வெளிப்பகுதிகள் மற்றும் பேருந்து போன்றவற்றில் முகக்கவசம் அவசியமில்லை என்று கூறுகிறார்கள். இதுபோல, இளைஞர்களும் முகக்கவசம் அவசியம் இல்லை […]

Categories
உலக செய்திகள்

“5 மாநிலங்களை அதிர வைத்த திருடர் குல திலகம்!”.. இறுதியில் மாட்டிய சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு இளைஞர் 5 மாநில காவல்துறையினரை திணற செய்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள St. Gallen என்ற மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் 5 மாநிலங்களில் 60 திருட்டு சம்பவங்களை செய்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடத்தில் தொடர்ந்து பல மாதங்களாகவும், 2020 ஆம் வருடத்தின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் திருட்டு சம்பவங்களை செய்துள்ளார். இதில் உயர்ரக மிதிவண்டிகள், வாகனங்களின் டயர்கள் போன்றவற்றை மட்டும் திருடிச் சென்று, அவற்றை […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு மனிதாபிமானமே இல்ல…. விபத்தை வீடியோ எடுத்த நபர்கள்…. காத்திருந்த சிக்கல்…!!!

விபத்து நடந்ததை வீடியோ எடுத்த வாலிபர்களுக்கு அபராதம் விதிக்கபட உள்ளது . சுவிட்சர்லாந்து நாட்டில் St. Gallen  நகரில் டிரைவர்கள்  3 பேர்  தங்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்ததை கண்ட அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கார் விபத்து St. Gallen  நகரில் அவசர உதவிப் பணியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாகும். எனவே இந்த கார் விபத்தை உண்மை என நினைத்த அந்த 3 நபர்களும் விபத்தில் […]

Categories
உலக செய்திகள்

உதவி செய்ய யாருமே இல்ல..! இரவு முழுவதும் திணறிய முதியவர்… பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

சுவிட்சர்லாந்தில் 80 வயது முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சகதியில் சிக்கி இரவு முழுவதும் தத்தளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் சுவிட்சர்லாந்தில் உள்ள Stein am Rhein என்ற நகர் வழியாக வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அங்குள்ள சகதி ஒன்றில் சிக்கியுள்ளார். மேலும் அங்கு உதவிக்கு யாரும் இல்லாத காரணத்தினால் மறுநாள் காலை 8.30 மணி வரை சகதிக்குள்ளேயே தத்தளித்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : வேல்ஸ் அணியை வீழ்த்தி …. இத்தாலி அதிரடி வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி ,சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றனர். யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ரோம் மைதானத்தில் நடைபெற்ற  ‘ ஏ ‘பிரிவு லீக் ஆட்டத்தில் இத்தாலி- வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த  ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய இத்தாலி அணி வீரர்கள் எதிர் அணியை திணறடித்தனர். இதில் இத்தாலி அணி  வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் கோல் அடித்தார் . இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் வேல்ஸ் அணி திணறியது. […]

Categories
உலக செய்திகள்

இந்த ரயில்ல வெடிகுண்டு இருக்கு ….பாதிக்கப்பட்ட ரயில் சேவை …சுவிட்சர்லாந்தில் பரபரப்பு …!!!

ரயிலில்  வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த  பொய்யான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது . சுவிட்சர்லாந்து மாகாணத்தில் உள்ள  Solothurn பகுதியில் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உடனடியாக போலீசார் அந்த ரயிலை நிறுத்தி அதிலிருந்த பயணிகள் அனைவரையும்  வெளியேற்றினர். அதன் பிறகு ரயில்  முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இந்த பொய்யான தகவலால் பல ரயில்கள் தாமதமாகவும் , சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும் ரயில் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”.. இவ்வளவு தொகையா..? ஜோபைடன் சுவிஸ் வந்ததற்கு செலவான தொகை..!!

சுவிட்சர்லாந்தில், ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிபர்களின் சிறப்பு சந்திப்பிற்கு செலவான மொத்த தொகை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் சுவிட்சர்லாந்திற்கு வந்திறங்கியவுடன் ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு வாய்ந்த Intercontinental ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர். இந்த ஹோட்டலுக்கு இரவு நேர வாடகை 30 ஆயிரம் பிராங்குகள். மேலும் அதிபர் வரவிருப்பதால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பாதுகாப்பிற்காக 15,000 பிராங்குகள் செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டிற்காக வந்த அதிகாரிகள் தங்குவதற்காக அமெரிக்க அரசு ஒரு மில்லியன் பிராங்குகள் செலவு செய்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஜோபைடன்-விளாடிமிர் புடின் சந்திப்பிற்கு எதிர்ப்பு.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒசாமாவின் சகோதரர் மகள்..!!

சுவிட்சர்லாந்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பை எதிர்த்து ஒசாமா பின்லேடனின் சகோதரர் மகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்து கலந்துரையாடினார்கள். அவர்களின் பேச்சுவார்த்தையானது சுமார் 4 மணி நேரம் நடந்து நல்லபடியாக முடிந்ததாக இரு நாட்டு தலைவர்களும் கூறினர். இந்நிலையில் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான, ஒசாமா பின்லேடனின் சகோதரர் மகளான  Noor bin Ladin என்பவர் ஜெனீவா நகரின் ஏரியில் ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஜோபைடன்-விளாடிமிர் புடின் பங்கேற்கும் மாநாடு.. வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவுள்ள உச்சி மாநாடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடானது இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடக்கவுள்ளது. இதில் உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளின் அரசியல் நிலை, அணு ஆயுதங்கள் குறைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளார்கள். ரஷ்ய நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல்கள், சிறை தண்டனை, எதிர்க்கட்சி தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

USB கிளையில் முகமூடியுடன் நுழைந்த மர்மநபர்.. பணத்தை திருடிவிட்டு தப்பியோட்டம்..!!

சுவிட்சர்லாந்தில், மர்மநபர் ஒருவர் USB கிளையில், பல ஆயிரம் யூரோக்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    சுவிட்சர்லாந்தில் உள்ள Römerhofplatz என்ற நகரில் இருக்கும் UBS கிளையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 4:30 மணிக்கு முகமூடியுடன் ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார். அதன் பின்பு திடீரென்று கத்தியை காட்டி அங்குள்ள பணியாளர்களை மிரட்டியுள்ளார். இதில் பதறிய பணியாளர்கள் அப்படியே நின்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்த நபர் பல ஆயிரம் யூரோ பணத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார். […]

Categories
உலக செய்திகள்

“விபத்துக்குள்ளான கிளைடர்!”.. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

சுவிட்சர்லாந்தில், கிளைடரும், சிறிய ரக விமானமும் ஒரே சமயத்தில் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சுவிட்சர்லாந்தில் உள்ள Thurgau என்ற மாகாணத்தில் கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அதில் விமானி மட்டும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறிய ரக விமானமான Robin DR400-ம், Neuchâtel என்ற மாகாணத்திலிருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. இந்த விமானத்தில் விமானி, ஒரு பெண், ஆண் மற்றும் ஒரு குழந்தை இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் காலையில் சுமார் 9:30 மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

திடீர்னு அந்த சத்தம் மட்டும் கேட்டுச்சு..! போலீஸால் மீட்கப்பட்ட சடலம்… அக்கம்பக்கத்தினர் பரபரப்பு தகவல்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டுபேண்டோர்ப்பி என்னும் பகுதியில் ஆண் ஒருவருடைய சடலம் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள டுபேண்டோர்ப்பி என்னும் நகரில் 58 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடனும், 59 வயது ஆண் ஒருவர் சடலமாகவும் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட இருவருடைய உடலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டிலும் தடை செய்யப்படுமா..? பரபரப்பான வாக்கெடுப்பு… விவசாயிகள் எச்சரிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் இன்று பல முக்கிய திட்டங்களுக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்து மக்கள் இன்று செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்யும் திட்டத்திற்கு வாக்களிக்க உள்ளனர். மேலும் சுவிஸ் குடிமக்கள் அவசர கொரோனா நிதி, fossil fuels-களுக்கான புதிய வரி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட பிற திட்டங்கள் குறித்த வாக்கெடுப்பு ஆகியவற்றிலும் இன்று வாக்களிக்க உள்ளனர். பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்தும் மருந்துகள் உயிரியல் அல்லது ரசாயன மருந்துகள் ஆகும். இந்த செயற்கை பூச்சிக்கொல்லி […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்த நபர்.. காவல்துறையினருக்கு வந்த அவசர அழைப்பு..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சூரிச்சில் கடந்த சனிக்கிழமையன்று இரவு 8:30 மணிக்கு காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பில் தம்பதியினருக்குள் ஏற்பட்ட சண்டையால் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்த ஒரு பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்பு அந்த வீட்டின் மாடியில் ஒரு நபர் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலிலும் துப்பாக்கி குண்டு […]

Categories
உலக செய்திகள்

மில்லியன் கணக்கில் போலி மாத்திரைகள்.. அதிகாரிகளின் சோதனையில் அதிர்ச்சி..!!

சுவிட்சர்லாந்து உட்பட சுமார் 55 நாடுகள் சேர்ந்து உலகம் முழுக்க சோதனை நடத்தியதில் மில்லியன் கணக்கான போலியான மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் இந்த சோதனையில், சுமார் 695 பார்சல்களை பரிசோதனை செய்திருக்கின்றனர். அவற்றில் போலியான மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் கண்டறியப்பட்டது. பத்து பாக்கெட்டுகளில் ஒன்பதில் போலியான வயாகரா மருந்துகள் இருந்துள்ளது. இந்த மருந்துகளால் மக்களின் உடல்நலம் பாதித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும் அட்டையில் ஒரு மருந்தின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது. பாக்கெட்டில் வேறு மருந்துகள்  இருந்துள்ளது. குறிப்பிட்ட […]

Categories
உலக செய்திகள்

இவை தான் வாழ தகுந்த இடம்..! முதல் 10 இடங்களில் உள்ள நகரங்கள்… வெளியான பரபரப்பு பட்டியல்..!!

உலகம் முழுவதும் உள்ள பல நகரங்களும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக களை இழந்துள்ள நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டு நகரங்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்கள் பலவும் களை இழந்துள்ள நிலையில் ஹாம்பர்க், வியன்னா ஆகிய நகரங்களும் கடந்த வருடத்தை விட மிக மோசமான நிலையில் உள்ளது. அதே சமயம் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா, […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சான்றிதழ் திட்டம் தொடக்கம்.. சுவிட்சர்லாந்தில் விநியோகிக்கப்பட்டது..!!

சுவிட்சர்லாந்தில், கொரோனா சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.    சுவிட்சர்லாந்தில் முன்னரே அறிவித்தபடி, கொரோனா சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காகிதம் அல்லது மின்னணு வடிவத்தில் இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனை சர்வதேச பயணம் தொடங்கி பலவற்றிற்கு பயன்படுத்தலாம். மேலும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா சான்றிதழ் light என்று மற்றொன்றும் உருவாக்கப்படவுள்ளது. இந்த light  சான்றிதழை நாட்டிற்குள்ளாக மட்டும் உபயோகிக்கலாம். அதாவது தகவல்கள் திருடுவதை கட்டுப்படுத்துவதற்காக இச்சான்றிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. பயணம் மேற்கொள்வதற்கு கொரோனா சான்றிதழ் […]

Categories
உலக செய்திகள்

“இப்படியா செய்வது!”.. பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. தந்தை செய்த கொடூரம்..!!

சுவிட்சர்லாந்தில், ஒருவர் தன் 8 மாத குழந்தையை அழுத்தியதில் குழந்தை இறந்ததால், ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளவுள்ளார். சூரிச்சில் உள்ள ஓபர்லாந்தில் வசிக்கும் ஒருவர் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதம்  வீட்டில், தன் குழந்தையுடன் விளையாடும்போது, குழந்தையை கடுமையாக அழுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதற்கு முன்பும் ஐந்து தடவை, அவர் தன் பச்சிளம் குழந்தையை கையால் அழுத்தியே காயப்படுத்தியிருக்கிறார். அதில் இரண்டு தடவை […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள்.. சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு மருத்துவக் கருவிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்திலிருந்து, கொரோனா ஆண்டிஜன் சோதனை கருவிகள் அரை மில்லியன், வென்டிலேட்டர்கள் 50, பரிசோதனை உபகரணங்கள் 3.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்புடையது, ஆக்சிஜன் உருவாக்கக்கூடிய கருவிகள் 150 போன்றவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பிற்கு, கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 16 டன் மருத்துவ கருவிகள் சூரிச்சிலிருந்து, ஒரு விமானத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் மீண்டவர்களுக்கான சான்றிதழ்.. சுவிட்சர்லாந்தில் வெளியான அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் நாளையிலிருந்து கொரோனாவிற்கான சான்றிதழ் நடைமுறைக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலும் இச்சான்றிதழ் வெளியிடப்படும். இதனை நகலெடுத்து உபயோகிக்கும் படியும், மொபைல் செயலியில் வைத்திருக்கும்படியும் செயல்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் ஜூன் மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் பெர்ன் மாநிலத்தில் முதலாவதாக, வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவர்கள், மருந்தகங்கள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட இடங்கள் போன்றவற்றில் இச்சான்றிதழை மக்கள் பெறலாம். அதாவது தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் குறைந்த கொரோனா தொற்று.. கட்டுப்பாடுகள் எப்போது நீக்கம்..? வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தொடர்பான விதிமுறைகளை ஆகஸ்ட் மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சரான Alain Berset கூறுகையில், இது நமது கடுமையான முயற்சியின் பலன். ஒவ்வொரு கட்டுப்பாடும்  தளர்த்தப்படுவது ஆபத்துக்குரியதுதான். அதற்காக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. எனினும் பெடரல் கவுன்சிலின் இலக்கு முடிந்தவரைக்கும் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் குறைந்த கொரோனா தொற்று.. முகக்கவசம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!!

பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தும் முகக்கவசம் கட்டாயம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளது.   உலக சுகாதார அமைப்பு கொரோனாவை தடுப்பதற்கான முக்கிய கருவி முகக்கவசம் என்று அறிவுறுத்தியிருந்தது. எனவே உலக நாடுகள் அனைத்தும் முகக்கவசம் அணிவதை  கட்டாயப்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து இஸ்ரேலில் கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள்  செலுத்தியவர்களும் முகக்கவசம், கட்டாயம் அணிய தேவையில்லை என்று அமெரிக்க சுகாதார […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட அறிவிப்பு.. தனிமைப்படுத்துதல் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடு..!!

சுவிட்சர்லாந்து, தனிமைப்படுத்துதல் பட்டியலில் தற்போது பிரிட்டன் நாட்டையும் சேர்த்திருப்பதாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு, நேற்று மாலை ஆறு மணியிலிருந்து, பிரிட்டன் மக்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் சுமார் பத்து தினங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதாவது தற்போது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவிவருவதால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக செலுத்தி கொண்டிருந்தாலும் கூட, கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“கணவரை கொல்ல வீட்டிற்கு தீ வைத்த பெண்!”.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தன் கணவரை பல முறை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் இருக்கும் Zofingen என்ற பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தினரின் வீட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் சிறிய காயங்கள்கூட இல்லாமல் தப்பி விட்டார். ஆனால் அவரின் கணவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் குழந்தைகளுடன் வாழ ஏற்ற இடம் இது தான்.. ஆய்வில் வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் உள்ள வலாய்ஸ் என்ற மண்டலம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் குறைந்த வருமானத்தில் வாழ்வதற்கு ஏற்ற இடம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தின் லவாய்ஸ் மண்டலம், தொழிற்சாலைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் கைக்கடிகார தயாரிப்பு போன்றவற்றில் முதன்மையாக விளங்குகிறது. வெளிநாட்டுப் பணியாளர்கள் அதிக சம்பளம் மற்றும் இயற்கை நிலப்பரப்பிற்காக சுவிட்சர்லாந்தை அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் பிற நாட்டவர்கள் அங்கு வாழும் மக்களுடன் இணைந்து அன்றாட வாழ்க்கையை வாழ்வது கடினமாக இருப்பதாகவே கூறுகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.. வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் அமெரிக்க ஜனாதிபதியும், ரஷ்ய ஜனாதிபதியும் வரும் ஜூன் மாதத்தில் சந்திக்கவிருப்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   சுவிட்சர்லாந்தில் நடக்கப்போகும் மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் சந்திக்கவுள்ளார்கள். வரும் ஜூன் மாதத்தில் 16ஆம் தேதி அன்று ஜெனீவாவில் இவர்களின் சந்திப்பு நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பாதுகாப்புப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாதத்திற்கு முன் மாயமான இளம்பெண்.. தாய் கண்ணீர் கோரிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் மாயமான இளம்பெண் குறித்து தற்போது வரை எந்த வித தகவலும் கிடைக்காததால் அவரது தாயார் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.  சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் மண்டலத்தில் இருக்கும் Adligenswil என்ற பகுதியில் வசிக்கும் Alishia என்ற 21 வயது இளம்பெண் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். எனினும் தற்போது வரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில்  Alishiaவின் தாயான Anita Bucher கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருக்கிறார். Alishia […]

Categories
உலக செய்திகள்

“பண மோசடி வழக்கு!”.. பிரபல கால்பந்து கூட்டமைப்பின் அலுவலர் மீது குற்றச்சாட்டு..!!

சுவிட்சர்லாந்து அரசு, பணமோசடியில் ஈடுபட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின், முன்னாள் செகரட்டரி ஜெனரல் மீது அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.  Conmebol என்ற தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின், முன்னாள் செகரட்டரி ஜெனரலாக இருந்தவர் 79 வயதான Eduardo Deluca. இவர் மீது சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகமானது, 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்திருக்கிறது. மேலும் 18,000 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்பு அபராதத்தை உடனடியாக செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவித்தது. […]

Categories
உலக செய்திகள்

நகைக்கடைக்குள் புகுந்த கார்.. ஓட்டுநர் சொன்ன வித்தியாசமான காரணம்..!!

சுவிட்சர்லாந்தில், வாகனம் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் என்ற மண்டலத்தில் கடந்த புதன்கிழமை அன்று மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று அங்குள்ள நகைக்கடைக்குள் வேகமாக புகுந்துள்ளது. இதில் ஐந்து நபர்கள் காயமடைந்துள்ளனர். மட்டுமல்லாமல் 1,00,000 பிராங்குகள் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய அந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது 19 வயதான அந்த இளைஞர் கூறுகையில், “நான் காரில் சென்று கொண்டிருந்தபோது, என் முன்னாள் காதலி எனக்கு […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களுடன் ஏற்பட்ட சண்டை.. குளியறையில் கிடந்த இரத்தம்.. விடுதியிலிருந்து வெளியேறிய மாணவி மாயம்..!!

சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த பெல்ஜியத்தை சேர்ந்த மாணவி, காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவி Sarah Kassandra (21). இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள Valais என்ற மண்டலத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவில் Sarahவிற்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விடுதியிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆனால் தற்போது வரை அவர் விடுதிக்கு திரும்பாததால் காவல்துறையினரிடம் […]

Categories
உலக செய்திகள்

புதரிலிருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பெண்.. படுகாயங்களுடன் சிறுவன் மீட்பு.. அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள்..!!

சுவிட்சர்லாந்தில் ஒரு இளம்பெண் பேச்சுமூச்சில்லாமல் புதரிலிருந்து மீட்கப்பட்ட 3 மணி நேரத்தில் 20 பேர் கொண்ட கும்பல் மோதலில் ஈடுபட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள பாஸல் மண்டலத்தில் இருக்கும் துறைமுக பகுதியில் நேற்று அதிகாலை சுமார் இரண்டு மணிக்கு இருபது நபர்கள் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்த 15 வயது சிறுவனையும், ஒரு இளைஞரையும் மீட்டிருக்கின்றனர். ஆனால் அந்த கும்பல் காவல்துறையினர் வருவதற்கு முன்பே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியா… உதவிக்கரம் நீட்டிய பிரபல நாடு… வெளியான முக்கிய தகவல்..!!

சுவிட்சர்லாந்து அரசு கொரோனாவால் திணறும் இந்தியாவிற்கு வென்டிலேட்டர் போன்ற மருந்து உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய பிரதேசம், தலைநகர் டெல்லி போன்ற நகரங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. அதன்படி உலக நாடுகள் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

இந்த வருஷம் அதிகமா பதிவாகியிருக்கு..! பிரபல நாட்டில் வழக்கத்திற்கு மாறான பிறப்பு விகிதம்… வெளியான முக்கிய தகவல்..!!

வழக்கத்திற்கு மாறாக சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் இந்த வருடம் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டை விட 2020-ல் சுவிட்சர்லாந்தில் பிறப்பு எண்ணிக்கை சரிவடைந்துள்ள நிலையில் 2021-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டம் நிலவி வருவதால் மிக குறைந்த பிறப்பு எண்ணிக்கையை பதிவாகும் என்று கருதப்படுகிறது. ஆனால் 2021-ல் பெர்ன் மண்டலத்தில் மட்டும் பிறப்பு விகிதம் அதிகரித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பிறப்பு எண்ணிக்கை 2020-ல் முதல் மூன்று மாதங்களில் 447 என […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளோம்..! முன்வந்துள்ள பிரபல நாடு… வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்..!!

கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வரும் இந்தியாவுக்கு, சுவிட்சர்லாந்து உடனடியாக உதவிகளை அனுப்ப தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிதாக கொரோனாவால் நாள் ஒன்றுக்கு 300,000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் 200,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என பல நாடுகளிலிருந்து ஆக்சிஜன், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசி என வழங்கி இந்தியாவிற்கு உதவுவதற்கு முன் வந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

மீன்களை உயிரை காப்பாற்ற வேண்டும்…. நதிக்குள் புதிய நீரை பாய்ச்சும் தீயணைப்பு வீரர்கள்…. ஏன்….?

சுவிஸ் நதி ஒன்றில் உள்ள மீன்களை காப்பாற்றதீயணைப்பு வீரர்கள் புதிய நீரை பாய்ச்சி வருகின்றனர். சுவிட்சர்லாந்து Dardagny என்ற இடத்திலுள்ள நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்துவிட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும் நதியில் உள்ள மீன் போன்ற உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நதியில் புதிய நீரை மின் மோட்டார் மூலம் தீயணைப்பு வீரர்கள் பாய்ச்சி வருகின்றனர். இதனிடையே சில மீன்கள் செத்து மிதந்தும் வருகிறது. எனவே தீயணைப்பு வீரர்கள் நதிக்குள் புதிய […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டுக்கு போக முடியல..! சுவிட்சர்லாந்த்தில் சிக்கிய பெண்… கைது செய்த காவல்துறையினரால் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்த பிரேசிலிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது சகோதரி Caty மற்றும் தாயாரை சந்திப்பதற்காக 36 வயதான Brenda தனது 9 வயது மகளுடன் சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் பிப்ரவரி மாதத்தில் தனது சுற்றுலா விசா காலாவதியாவதற்கு முன்பாக ரியோ டி ஜெனிரோவுக்கு திரும்பி செல்ல நினைத்த போது, விமான சேவைகள் கொரோனா அச்சுறுத்தல் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. இதுக்கு மட்டும் தான் அனுமதி…. சுவிஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!

ஊரடங்கு தளர்வுகள் குறித்து சுவிஸ் மாகாணம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 19 முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடு தளர்வுகள் குறித்து பெடரல் கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரிகள் […]

Categories
உலக செய்திகள்

மர்மமாக மறைந்த ரோலக்ஸ் கைகடிகாரம்…. எவ்ளோ ரூபாய்க்கு ஏலம் போச்சு தெரியுமா….? தபால் துறை மீது குற்றச்சாட்டு….!!

ரோலக்ஸ் கைக்கடிகாரம் மர்மமான முறையில் காணாமல் போனதால் தபால்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் Graubünden மாகாணத்தில் ஒருவர் ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றை ஏலத்தில் எடுத்துள்ளார். அவர் 8000 பிராங்குகள் கொடுத்து இணையத்தில் ஏலம் எடுத்ததை அந்நிறுவனம் தபாலில் அனுப்பியுள்ளது. ஆனால் தபால் பார்சலை பிரித்துப் பார்க்கும்போது கைக்கடிகாரம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரிக்கும்போது அது மூன்று அடுக்கில் பார்சல் செய்யப்பட்டுள்ளதால் கீழே விழ வாய்ப்பில்லை என்றும் Frauenfeld என்ற தபால் நிலையத்தில் எடைபோடும் போது […]

Categories
உலக செய்திகள்

2016ல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்….. சடலத்தை மீட்ட அதிகாரிகள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த Beatrice stockli என்பவர் மாலி நாட்டில் கிறிஸ்துவ மிஷனரியாக சேவையாற்றி வந்தார். அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மாலியில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினால் கடத்தப்பட்டு பின்னர் 9  நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.அதன் பிறகும் Beatrice stockli மீண்டும் தொடர்ந்து சேவையாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Beatrice stockli  மீண்டும் கடத்தப்பட்டார். பிரான்ஸ் […]

Categories

Tech |