ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளதால் அங்கு உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு புறப்பட தயாராக இருந்த விமானத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
