கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அங்கு பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து சாமியும், அம்பாளும் கோவிலினுள் ஆடி வீதியில் உலா வந்து நந்திக்கு காட்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆராதனை செய்யப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]
