சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு தேவனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(41). இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மணிகண்டன் நேற்று வடக்கிபாளையத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலைகளை முடித்துவிட்டு மதியம் உணவு உண்பதற்காக அங்குள்ள மதில் சுவர் அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கன மழையினால் வலுவிழந்த அந்த சுவர் திடீரென இடிந்து மணிகண்டனின் மீது விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக […]
