வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அல்லிகுட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏழுமலை-செல்லம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ராமசாமி என்ற மகனும், காளியம்மாள் என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ராமசாமி அதே பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், 5 வயதில் பாலசபரி என்ற மகனும் இருந்தனர். இதில் காளியம்மாளுக்கும் வலசையூரை சேர்ந்த […]
