பாலத்தின் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் ஆண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுயம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 6-வது மகன் முத்துக்குமாரை தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர் குடும்பத்தினருடன் தனியாக வசித்து வந்துள்ளனர். அவரது தந்தை இறந்துவிட்டதால் முத்துக்குமார் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் சென்னல் மாநகரில் […]
