விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெகனூர் அரசு உயர்நிலை பள்ளியில் வேலை பார்க்கும் 13 ஆசிரியர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு மூணாறுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை கடந்து வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமன், சரவணன், சந்திரலேகா, இந்திரா உட்பட 11 ஆசிரியர்கள் […]
