பல்கேரியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த கோர விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு மசிடோனியா நாட்டிலிருந்து 50க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சொகுசு பேருந்தில் துருக்கி சென்றிருக்கிறார்கள். அவர்கள், துருக்கியில் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று தங்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். பேருந்து, பல்கேரியா நாட்டின் வழியே சென்றிருக்கிறது. அப்போது, அந்நாட்டின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் போஸ்னெக் என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் நெடுஞ்சாலையில் சென்ற போது, ஓட்டுனரின் […]
