திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கு அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் […]
