சுற்றுலாத் தளங்களில் விடுமுறை தினத்தை ஒட்டி பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாத் தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இங்குள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் நேற்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி இருந்து காலை மாலை என இரு வேளைகளிலும் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இதனையடுத்து அருவியின் […]
