திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்ததால் நேற்று காலை பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1674 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஆகிய அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து […]
