சுற்றுலா பயணிகளை காட்டு யானைகள் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 9 காட்டு யானைகள் உலிக்கல், பில்லிமலை, காட்டேரி, மரப்பாலம், பர்லியார் போன்ற இடங்களில் சுற்றித்திரிகிறது. இந்நிலையில் ரன்னிமேடு பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டேரி பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் இருந்தனர். இவர்கள் […]
