தமிழக கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் தொடக்க விழா திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பள்ளி மாணவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வு கையேடு வெளியீட்டு விழாவில் சிறப்புறாற்றினார். அப்போது பேசிய அவர், இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8, 9-10, 11-12 […]
