தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நீராடியும் படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக கர்நாடகா புதுச்சேரியில் இருந்தும் அதிகளவில் பயணிகள் வருகை தந்தனர். ஒகேனக்கல் காவிரியில் சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. குறைவான நீர் […]
