பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 85,50,000 ரூபாய் நிவாரண நிதி சுற்றுலாத்துறை அமைச்சர் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வேளாண் பயிர்களான நெல், பருத்தி, சோளம், மக்காச்சோளம், உளுந்து, கரும்பு, தென்னை ஆகியவை 109.88 ஹெக்டரும், தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், தக்காளி மற்றும் பல்லாண்டு பயிரான முருங்கை, காய்கறி வகைகள், […]
