சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தநிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக வாரத்திற்கு ஒருநாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டுமென்று தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு இணங்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தன்னுடைய இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் இது போன்று திங்கள் அல்லது புதன்கிழமை நடந்தே அலுவலகம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் மற்ற அலுவலர்களையும் இதை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் […]
