கேஜிஎப் பட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய சுருதிஹாசன், தற்போது தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் சுருதிஹாசன் தன் வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் அவர் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதாவது, சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இதில் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். […]
