சுரங்க ரயில் நிலைய வாசலில் அடையாளம் தெரியாத நபர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லண்டனில் கேம்டன் டவுன் என்ற சுரங்க ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் யாரென்று அடையாளம் தெரியாத ஒரு நபர் தனக்கு தானே தீவைத்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலின் பேரில் போலீசார், மருத்துவக்குழு, லண்டன் விமான ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறை […]
