முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது, உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அடிக்கடி தமிழகம் மற்றும் தமிழக மக்கள் பற்றி பேசி வந்தேன். இது குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்னையறியாமலேயே நானும் ஒரு தமிழன் தான் என்று கூறினேன். தமிழகத்திற்குள் நுழையும்போது ஒரு […]
