மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணியில் இருந்த ஊழியர் மீது லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் காய்கறி லோடு ஏற்றி வந்த சரக்கு லாரி ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்வதற்காக கட்டணம் வசூல் செய்யும் இடத்திற்கு வந்தது. அப்போது அதற்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. […]
