ஆட்சிகள் அமைவதற்குதான் நான் காரணமாக இருந்துள்ளேனே தவிர ஆட்சிகள் கவிழ்ப்பதற்கு ஒருபோதும் நான் காரணமாக இருந்ததில்லை. ஆனால் அவர்கள் ஆட்சியில் கவிழ்வதற்கு மட்டுமே நான் காரணம் என்பதுபோல குறை கூறுகிறார்கள். என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார். பாஜகவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் சாமி. இவர் பாஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. இருந்த பொறுப்பிலிருந்து அன்மையில் நீக்கிவிட்டனர். ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணியன் சாமி, அவ்வப்போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களையும் சீண்டிக்கொண்டே இருப்பார். ஆனாலும் பாஜக ஆதரவையும் கைவிடமாட்டார். […]
