திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி போரூர் மாநகரம் மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய உள்ளது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றது. முக்கிய சாலைகளில் […]
