பொதுமக்களின் பார்வைக்காக சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் உருவ சிலைகள் அழகிய ரதங்களில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் உருவச் சிலைகள் அடங்கிய ரதங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. அந்த ரதங்களில் அழகு முத்து கோன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி, வேலு நாச்சியார், போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவில் […]
