பிரபல ரவுடி ஒருவர் சுடுகாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் வசிப்பவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவருக்கு சதீஷ்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று கிராம பகுதியில் உள்ள சுடுகாடு பக்கத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திருப்போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. […]
