தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பாக் ஜலசந்தியை சுஜேத்தா என்ற பெண் முதன்முதலாக நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பெங்களூரை சேர்ந்த சுஜேத்தா என்பவர் தொழில்முறை நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் கடந்த புதன்கிழமை அன்று காலை 8.23 மணியளவில், தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து நீந்த தொடங்கியுள்ளார். அதன்பின் 10 மணி 9 நிமிடங்கள் வரை கடலில் நீந்தி, தலைமன்னார் என்ற பகுதியை அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து மறுபுறமாக நீச்சல் அடித்துக் கொண்டே தனுஷ்கோடிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மறுநாள் […]
