தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுங்க கட்டணத்தையும் மத்திய அரசு ரூபாய் 40 முதல் ரூபாய் 240 வரை அதிகரித்து, மேன்மேலும் மக்கள் மீது சுமையை ஏற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பழம், பூ, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய […]
