பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகளிலும் ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை வசூலித்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் பாஸ்டேக் கட்டாயம் என்ற திட்டம் கடந்த 16 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஸ்டேக் பெறாத வாகனங்களுக்கு 2 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலாகி வந்துள்ளன. […]
