நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திடீரென அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 60 கிலோ மீட்டருக்கு குறைவான இடைவெளியில் செயல்படக்கூடிய சுங்கச்சாவடிகளை சட்டங்களுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயரும் […]
