மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவ நலத்துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் மருத்துவ நலத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சுகாதார பேரவை கூட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது ஆட்சியர் பேசும்போது, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தியதால் 80% பிரசவங்கள் அரசு மருத்துவமனையிலே நடப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்து கிராமங்களிலும் மக்கள் பிரதிநிதிகளை […]
