தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறைந்ததன் காரணமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் எக்ஸ்இ வகையான தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அது அதிவேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு எக்ஸ்இ வகையான தொற்று […]
