உயிரிழந்தவர்களின் சடலத்தை ஒப்படைப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளரை பணியிட மாறுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் சடலத்தை பாதுகாப்பான முறையில் கொடுப்பதற்கு அரசின் இலவச அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இவ்வாறு இறந்தவர்களின் சடலத்தை அனுப்பி வைப்பதற்கு […]
