பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் மத்திய அரசின் சுகாதார அடிப்படை வசதிகள் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் அப்போது: “சுகாதாரத்துறை மற்றும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக பட்ஜெட்டில் 3 காரணிகளால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நவீன உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை அதிகரித்தல், ஆராய்ச்சி ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய மூன்று […]
