புதுச்சேரியில் கோரோவால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக 3 பேரை பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை அணிந்த பணியாளர்கள் நான்கு பேர், ஆம்புலன்ஸில் இருந்து உடலை தூக்கி வந்தனர். […]
