தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் வளாகம் அமைந்துள்ளது. இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் தமிழகத்தில் பிஏ 4 வகையில் 7 பேருக்கும், பிஏ 5 வகையில் 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்கள் லேசான தொண்டை வலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளில் இருந்து தற்போது குணமடைந்துள்ளனர். […]
