தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் இருந்ததாவது “அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த நவம்பர் 27-ஆம் தேதியன்று வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, ஒமிக்ரான் அச்சுறுத்தலினால் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதனையடுத்து முக்கிய ஹாட்ஸ்பாட்களை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். அதன்பின் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை INSACOG ஆய்வகத்திற்கு விரைவாக அனுப்ப வேண்டும். […]
