கனடாவின் சுகாதாரத்துறை ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளது. கனடாச் சுகாதாரத் துறையான “Health Kanada” பைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் அனுமதியளித்தது. எனினும் நவம்பர் மாதத்தில் வெளியான சோதனையினால் ஆஸ்ட்ராஜனகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்க தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்று அறிந்த பின்பு தற்போது அனுமதி அளித்திருக்கிறது. […]
