தனது பணியை செய்த சுகாதாரத்துறை ஆய்வாளரை ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே வாகனத்தில் பயணம் செய்பவர்கள் முககவசம் அணிந்து உள்ளாரா என சோதனை செய்தும் வருகின்றனர். இதில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் இருக்கிறதா மற்றும் இருமல், சளி உள்ளதா எனவும் பரிசோதனை […]
