பிரிட்டனில் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அமைச்சரவையில் இருக்கும் முக்கால்வாசி பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். பிரிட்டனில் சஜித் ஜாவித்(51) புதிய சுகாதார செயலாளராக சில நாட்களுக்கு முன்பு தான் பதவியேற்றார். இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டதனால் சிறிய அறிகுறிகள் தான் தனக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினார். எனவே அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த தகவல் கண்டறியப்பட்டது. அதன்பின்பு அவர்களிடம் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதாவது […]
