இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்க நாட்டில் சிறியவகை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவா் உட்பட 2 போ் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனம் கூரியதாவது, “சுகதா தாஸ் என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஆவர். அரிஸோனா மாகாணத்தின் யூமா மண்டல மருத்துவ மையத்தில் இருதய நோய் நிபுணராக சுகதா தாஸ் பணியாற்றி வந்தார். […]
