செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டம். தேசிய அக்கரைக்கு வழி வகுக்கக்கூடிய நல்ல திட்டம் தான். ஆனால் தேசிய கொடியை சுதந்திர தின நாளில் மட்டும் ஏற்றுவது தான் சிறந்தது என்று நாடு கருதி விட முடியாது. ஆகஸ்ட் 15 அன்றும், குடியரசு திருநாளான ஜனவரி 26 அன்று மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்துவிட்டால், தேசத்தின் சிறந்த குடிமகனாக ஆகிவிட மாட்டோம். 365 நாளும் நான் தேசத்தின் உடைய குடிமகன் என்ற அக்கறையை […]
