Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா உறுதி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு..!

சென்னை திருவல்லிக்கேணியில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: டெல்லி-காசியாபாத் எல்லைக்கு சீல்… வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி மற்றும் காஜியாபாத் இடையிலான எல்லைகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன. காசியாபாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1397 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் சுமார் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்கு சீல் வைக்கணும், தவறினால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா… மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சீல்..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அதிகம் பாதித்த 15 மாவட்டங்களுக்கு சீல்: உத்தரபிரதேசம் அதிரடி

கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்துள்ளது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், மகாராஜ்கஞ்ச், சீதாபூர், சஹரன்பூர் மற்றும் பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை அம்மாநில அரசாங்கம் சீல் வைத்து மக்கள் செல்ல தடை விதித்துள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் ஹோம் டெலிவரி மூலம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் மற்றும் மருத்துவ குழுக்கள் மட்டுமே உள்ளே செல்ல […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை… கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி!

சென்னையில் விதிகளை முறையாக பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்த கடைகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையான மளிகைக்கடைகள், பால், இறைச்சி கடை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் இறைச்சி விற்பனை செய்து வந்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் : காரணம்?

திருச்சியில் அனுமதி இன்றி இயங்கி வந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உடனடியாக சீல் வைக்க  வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருச்சியில் பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஸ்ரீரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 23 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் […]

Categories

Tech |