தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் போண்டாமணி. இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தற்போது போரூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் இருக்கிறார். இவரை முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அதிமுக கட்சியின் சார்பில் 1 லட்ச ரூபாயை மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளனர். அதன்பின் போண்டாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]
