திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட இணை பதிவாளர் சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பார்வை-1 திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்கேடுகள் பற்றி 1983ம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் […]
