10% இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட, மண்டல் கமிஷன் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு கொள்கையை நிலைநாட்டிட திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் திமுக தரப்பில் ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு […]
