வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி மக்களுடன்தான் என அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (நவ. 2) சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று (நவ. 2) அக்கட்சி தலைவர் உரையாற்றியுள்ளார். இந்நிலையில் அது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஊடகப்பிரிவு அறிக்கை […]
