சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதுக்கண்மாய் வரத்து கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்றது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கரியாம்பட்டி கிராமத்தில் புதுக்கண்மாய் வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எஸ்.புதூர் ஆக்ஸிஸ் அறக்கட்டளை மற்றும் தானம் அறக்கட்டளை சார்பில் சீரமைப்பு […]
