Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி,கடலூரில்… சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு பணிகள்…!!!!!

புதுச்சேரி- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இந்த நிலையில் விபத்தை தடுக்க தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சிமெண்டு கலவையை கொட்டி பொதுப்பணித்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.  இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும் சாலையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் […]

Categories
உலக செய்திகள்

போரடிச்சா நாங்க என்னவேணுனாலும் பண்ணுவோம்…. 6 கோடி மதிப்புள்ள ஓவியம்…. போச்சா….?

சுமார் 6 கோடி மதிப்புள்ள ஓவியத்தை போரடித்ததால் பேனாவால் வரைந்த காவலாளி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ரஷ்யா  நாட்டில் யெல்ட்சின் மையத்தில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது.  இந்த மையத்தில் புதிதாக ஒரு காவலாளி வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் 60 வயதான அந்த காவலாளி வேலைக்கு சென்ற முதல் நாளே டிரெட்டியாகோவ் கேலரியில் இருந்து கடனாக பெற்ற கலைஞர் லெபோர்ஸ்காயாவின் “மூன்று உருவங்கள்” என்ற ஓவியத்தின் மீது பால்பாயிண்ட் பேனாவை கொண்டு கண்களை வரைந்துள்ளார். இதனால் ஓவியத்தை சேதப்படுத்திய காவலாளியை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல இரண்டாவது மலைப் பாதையை வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையால், மலைப் பாதை மற்றும் அலிபிரி நடைபாதை ஆகியவை பலத்த சேதமடைந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பற்ற சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.இதையடுத்து ஐஐடி வல்லுநர்கள் உதவியுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட கால அடிப்படையில் வலுவான […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1.5 கோடி… பள்ளமான சாலைகளை சரிசெய்ய ஒதுக்கீடு… சென்னை மாநகராட்சி…!!!

சென்னை மாநகராட்சியில் பள்ளமாக உள்ள சாலைகளை சரி செய்வதற்கு ரூபாய் 1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 5,500 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன. இதில் 942 உட்புற சாலைகள் மற்றும் தெருக்களில் 30 ஆயிரம் சதுர மீட்டர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சாலைகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு… பிரம்மோற்சவ விழாவிற்கு தயாரான திருப்பதி தேவஸ்தானம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பாதையை சீரமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்செய்து வருகின்றனர். இவர்கள் திருப்பதி வந்தவுடன் அரசு பேருந்து அல்லது தனியார் வாகனங்கள் மூலம் திருமலைக்கு செல்கின்றனர்.அதோடு அலிபிரி நடைபாதை வழியாக நடந்தும் செல்கின்றனர். இந்த அலிபிரி நடைபாதை ஆனது 7.6 கிலோ மீட்டர் நீளம் உடையதாகவும் உள்ளது. இந்த நடைபாதையின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க ஒன்னும் செய்ய வேண்டா… நாங்களே பார்த்துப்போம்… கெட்டிக்கார சிறுவர்கள் செய்த வேலையைப் பாருங்க…!!!

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சிறுவர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் பக்மாரா என்ற கிராமம் உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக சாலை சீரமைக்க படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகளை ஒன்றிணைந்து சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தவறுகளையும் அலட்சியங்களையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே இந்த சிறுவர்களின் செயல் சமூகத்தின்மீது ஒவ்வொருவரும் அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. #WATCH | […]

Categories
மாநில செய்திகள்

வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணி தொடங்க உள்ளதாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுனால தட்டுப்பாடு இருந்துச்சு..! சீரமைத்த மாநகராட்சி பணியாளர்கள்… பொதுமக்கள் பாராட்டு..!!

மயிலாடுதுறையில் உள்ள சீர்காழியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் சுத்தமல்லி என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குடிநீர் நகராட்சி வளாகத்தில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு அதன் பின்னர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் சீர்காழி அருகே உள்ள பிரதான சாலையில் கடந்த […]

Categories

Tech |