Categories
மாநில செய்திகள்

Breaking: கடும் நெருக்கடி கொடுத்த சீமான்… அதிர்ச்சி தோல்வி…!!

திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கேபி சங்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட சீமான் தோல்வி அடைந்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது…. மண்ணின் மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் – சீமான் கண்டனம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

தம்பி, தங்கைகளே…. தயவுசெய்து தலைக்கவசம் அணியுங்கள்…. சீமான் உருக்கம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தப்பி இருக்க முடியாது…! தேர்தலில் படாதபாடு படுத்தினாங்க… கவனமா இருக்க சொன்ன சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே போகும் போது அதற்கேற்ப நாம் வசதிகளை பெருக்கிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடினம். நான் அன்பாக வேண்டுவது இது அரசின் கடமை, இது மருத்துவர்களின் பணி என்று பேசிக் கொள்வது சரியல்ல. என்னுடைய பாதுகாப்பு சமூகத்தின் பாதுகாப்பு, நாம் கவனமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, கைகளை கழுவிக் கொள்வது. இரண்டாவதாக நான் என் அன்பு மக்களிடம் சொல்வது கருஞ்சீரகம் அதை பயன்படுத்துங்கள். மிளகை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடக்க முடியாத கோவம் வருது…. ஒவ்வொருத்தரும் புலி தான்…. அடிமை அரசாக இருக்குது …!!

செய்தியாளர்களை சந்தித்த சீமான், எங்களுக்கு போராடவேண்டும் எண்ணம் வரவே கூடாது என்று நினைக்கிறார்கள். புலி என்னவென்றால் ஒரு உணர்வு என்று தெரிந்து கொள்ள வேண்டும். கண் முன்னாடி என் தங்கை வன்முறைவு செய்து கொலை செய்யப்படுவது, வீடு இடிப்பது, அம்மாவை கொலை செய்வது, அதை பார்க்கும்போது அடக்கமுடியாத ஒரு கோபம் வருகிறது அல்லவா அந்த உணர்வுக்குப் பெயர் தான் புலி.அதை இவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். என் தங்கை, என் தம்பி, அம்மா, பெரியம்மா இறந்து கிடக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் முதல்வரானால்….. இந்தியா அப்படி போக முடியாது…. அதிரடி காட்டிய சீமான் …!!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வெளிநடப்பு செய்தது பற்றிய கேள்விக்கு, இந்த செயலை நான் வெறுக்கிறேன். அப்படி செய்து இருக்க கூடாது. அடிப்படையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்களுக்கும், இந்தியாவிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நாங்கள் இந்த நாடு நாடாக வதற்கு முன்பிருந்தே நிலைத்து வாழக்கூடிய பூர்வ குடிமக்கள். அப்படி பார்த்தால் இது என் நாடு, பாரத நாடே பைந்தமிழர் நாடு. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார்… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை செய்யுங்க…. கொரோனா பயம் இல்லை….. சீமான் சொன்ன டிப்ஸ் …!!

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொரோனா தடுப்பூசி மீது எனக்கு ஒரு அச்சம் இருந்தது. எனக்கு உயிருக்கு இனிய உறவு நடிகர் விவேக். இருவரும் ரொம்ப அன்பாக இருப்போம். நான் விசாரித்த வரைக்கும் கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல. நோய்த் தொற்று அதிகரித்துக் கொண்டே போகும் போது அதற்கேற்ப நாம் வசதிகளை பெருக்கிக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் கடினம். நான் அன்பாக வேண்டுவது இது அரசின் கடமை, இது மருத்துவர்களின் பணி என்று பேசிக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் கையெழுத்து போடமாட்டேன்…. வாரிசு இருக்கு வாங்கிக்கோங்க…. அதிமுக, திமுகவுக்கு ஷாக்….!

திமுக, அதிமுக வாங்கிய கடனுக்கு நான் பொறுப்பல்ல என சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நேற்று முன்தினம் புதிதாக அமையக்கூடிய அரசு… நீங்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி முதல்கட்டமாக எதை  செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு, நான் வந்தால் தம்பி பரோட்டா சூரி சொல்வது மாதிரி….  அழித்து ஆடுபவன். முதலில் இருந்து இதை அழிப்பா….  எல்லாரும் வேடிக்கையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 6 லட்சம் கோடி கடனுக்கு வந்ததும் மஞ்சள் நோட்டீஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் ஆணையம் .. இனி தான் என் ஆட்டத்தை பாக்க போறீங்க…. வேற லெவலில் ஆடும் சீமான் …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் ஆணையம் ஒரு நாடக குழு என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி செய்கிறது என்றால் பறக்கும்படை என்று ஒன்று போடுகிறது. பறக்கும் படையை போட்டு சாலையில் 370 கோடி நாங்கள் எடுத்து விட்டோம் என்று சொல்லுது ? யாரிடம் என்றால் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணம் கட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கின்ற மகனிடம் வாங்குகிறது. கடைக்கு சரக்கு வாங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சனியம் புடிச்சவுங்களுக்கு….. தம்பி சூரி ஸ்டைலில் பதிலடி…. சீமான் மாஸ் ஸ்பீச் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,  வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரந்தை எடுத்துச் சென்று விட்டதால் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 548வாக்குகளுக்கு, வெறும் 180வாக்குகள் தான் பதிவாகியுள்ளது என்ற கேள்விக்கு, இந்த சனியம் புடிச்சவுங்களுக்கு ஓட்டை போட்டு என வெறுத்து விட்டார்.இந்த தேர்தல் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு இரண்டு பேரையும் வெறுத்து விட்டார்கள். அவர்களால் கல்லை எடுத்து எரிய முடிய வில்லை, கட்டை எடுத்து அடிக்க முடியவில்லை, பேசாமல் கையை கட்டி கொண்டு ஓட்டுப் போடாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்கு திக்குனு இருக்கோம்….! அமெரிக்கா கூட சொல்லல…. நீங்க தான் அப்படி சொல்லுறீங்க …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தேர்தல் ஆணையம் ஒரு நாடக குழு என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி செய்கிறது என்றால் பறக்கும்படை என்று ஒன்று போடுகிறது. பறக்கும் படையை போட்டு சாலையில் 370 கோடி நாங்கள் எடுத்து விட்டோம் என்று சொல்லுது ? யாரிடம் என்றால் அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பணம் கட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று சொல்கின்ற மகனிடம் வாங்குகிறது. கடைக்கு சரக்கு வாங்கி விட்டு வரலாம் என்று போவரிடம் பறித்துக் கொள்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

இது ஒரு சாபக்கேடு….. வீழ்த்த நினைக்காதீங்க… வாழ்த்தி அனுப்புவோம்…. சீமான் கொடுத்த அட்வைஸ் …!!

கர்ணன் படத்தை பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எவ்வளவு பாராட்டினாலும் இந்த படத்தை இயக்கிய என்னுடைய தம்பி மாரி செல்வராஜ் அவரோடு ஒத்துழைத்த, ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் எல்லாருமே இந்த கதாபாத்திரத்தோடு ஊன்றிப் போய் ஒவ்வொரு நொடியும் நமக்கு பதற்றத்தை தரும் அளவிற்கு அந்த திரைக்கதை திருப்பம். இவ்வளவு சிறப்பா இந்த படம் வந்து இருக்கிறது. அதை உளமார நான் பாராட்டுகிறேன். அதே நேரம் மாரி செல்வராஜ் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். அதேநேரம் பொறாமையும் படுவேன்… இப்படி […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா பேட்டி மாநில செய்திகள்

எல்லாருமே கொண்டாடுங்க…. இது நம்முடைய கடைமை… கர்ணன் குறித்து சீமான் நச் பதில் …!!

கர்ணன் படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி ஒழிப்பு போராட்டத்தில் யாரும் தான் சுமந்து இருக்கின்ற, தான் அனுபவித்து இருக்கின்ற வேதனையை இன்னொருவருக்கு கடத்துவது இல்லை, பேசி இருக்கிறோம், எழுதி இருக்கிறோம். ஆனால் மற்றவர்களை உணரவைத்தோமா என்பது இல்லை, அதான் உண்மை. ஆனால் இந்த படம் இரண்டே கால் மணி நேரத்தில்… இவ்வளவு பெரிய தாக்கத்தை, ஒரு வலியை கடத்தி விடுகிறது என்பது படைப்பாளியாக என் தம்பி  […]

Categories
மாநில செய்திகள்

அப்படி சிந்தனை இருந்த ”தலைகுனிவான்”…. அப்படி கஷ்டப்பட்டா ”கண்ணீர் வடிப்பான்” சீமான் சொன்ன தகவல் …!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன்  பார்த்த சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, நிறைய படம் பார்த்தோம். இந்த படம் ஒரு படம் இல்லை ஒரு பாடம் என்று சொல்வோம். அது எல்லாம் எவ்வளவு பொய்யானது என்று இந்த படம் பார்க்கும் பொழுது தெரியும். உண்மையிலேயே இது தான் படம் அல்ல பாடம். இதை திரையில் ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். தம்பி  மாரி செல்வராஜ் பொறுத்தவரைக்கும் அவனுடைய அனுபவம், அவனுடைய வயது இதையெல்லாம் தாண்டிய […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்… சீமான் வேண்டுகோள்…!!!

தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்குமாறு பொதுமக்களிடம் சீமான் தெரிவித்துள்ளார். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் தண்ணீருக்காக அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. மனிதர்களாகிய நாம்தான் மற்ற உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் வெயில் தாங்க முடியாமல் பல பறவைகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதனால் நாம் அனைவரும் வெயில் காலத்தில் பறவைகள் தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம். அதன்படி கோடை காலம் தொடங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முடிந்தால் என் வீட்டில் ரெய்டு நடத்துங்கள் பார்ப்போம்… சீமான் சவால்…!!!

என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திப் பாருங்கள் பார்ப்போம் என சீமான் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு ஓட்டு போடுங்கள்… இல்லாவிடில் சுடுகாட்டில் போடுங்கள்…!!!

எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் இல்லை என்றால் சுடுகாட்டில் போடுங்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்”… சீமான் பரபரப்பு பிரசாரம்..!!

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி வேட்பாளர் காசிராமனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் வேட்பாளர் காசிராமனை ஆதரித்து நேற்று முன்தினம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- பணம் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அதனை மாற்றி குணம் இருப்பவர்களும் அரசியல் செய்ய முடியும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே மேடையில் என்கூட பேச ரெடியா?… சவால் விடும் சீமான்…!!!

தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் என்னுடன் பேச தயாரா என்று நாம் தமிழர் கட்சி சீமான் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவின் பெயரையே நான் மாற்றுவேன்… சீமான் அதிரடி பேச்சு…!!!

பாஜக தமிழகத்தின் பெயரை மாற்ற நினைத்தால் நான் இந்தியாவின் பெயரையே மாற்றுவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களுக்கு துரோகம்…. இலங்கைக்கு ஆதரவு… “தேர்தல் களத்தில் பழி தீர்ப்போம் பாஜகவை” சீமான் ஆவேசம்…!!

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் வெளிநடப்பு செய்த இந்திய அரசு தொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்காக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை இந்திய அரசு ஆதரிக்காமல் அங்கிருந்து வெளிநடப்பு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு தமிழர்களுக்கு ஆதரவாக இருக்காமல் சிங்களர்களுக்கு ஆதரவாக இருந்து ஈழப்படுகொலையை மறைக்க துணை போவது கண்டனத்துக்குரியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை விட கொரோனா ஒன்றும் பெரிதல்ல… சீமான் கடும் விமர்சனம்…!!!

பாஜக உடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் கொரோனாவுடன் வாழ்வது பெரிது இல்லை என்று சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்… 2 நாம் தமிழர் வேட்பாளர்கள் மாற்றம்… பரபரப்பு…!!!

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் 2 தொகுதி வேட்பாளர்கள் மாற்றப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள்… ஊழலை எப்படி ஒழிபார்கள்… சீமான் அதிரடி கேள்வி?…!!!

தமிழகத்தில் கொசுவை ஒழிக்க முடியாதவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள் என்று சீமான் கேள்வி எழுப்புகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி, ஈபிஎஸ், ஸ்டாலின் பாஸ் ஆவார்களா?… கிண்டலடித்த சீமான்…!!!

அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைத்தால் மோடி, ஈபிஎஸ் மற்றும் ஸ்டாலின் பாஸ் ஆவார்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மரங்களை வெட்டினால் உடனே சிறை தண்டனை… சீமான் அதிரடி வாக்குறுதி…!!!

நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் மரங்களை வெட்டினால் சிறை தண்டனை வழங்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன்…. சீமான் உறுதி…!!!

எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 20செலவு செய்யுறான்…! வெறும் 10ரூபாய் கிடைக்கு… பால்டாயில் வாங்கிட்டு போறான்…. சீமான் வேதனை

நேற்று மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் சந்தை அருகில் சீமான் பரப்புரை செய்த போது, இன்றைக்கு விவசாயி தொடர்ச்சியாக வாழமுடியாமல் தற்கொலை செய்து கொண்டு வருவதை பார்க்கின்றோம். ஒரு சிகரெட் பிடிக்காமல் உங்களால் வாழ்ந்து விட முடியும். ஆனால் சிகரெட்டை உற்பத்தி செய்கிற முதலாளி, விக்கிற முதலாளி கோடீஸ்வரன். மது குடிக்காமல் வாழ்ந்து விட முடியும். அதை உற்பத்தி செய்றவன்,  விற்பவரும் மாபெரும் கோடீஸ்வரன். கார் இல்லாமல் வாழ்ந்து விட முடியும், காரை உற்பத்தி செய்வன் விற்பவன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களே…! உங்களுக்கு ஏதும் தீமையா ? என்னை தாண்டி தான் வரணும்… சீமான் ஆவேசம்

மானாமதுரை தொகுதியின் திருப்புவனம் சந்தை அருகில் தேர்தல் பரப்பிறையில் பேசிய சீமான், அன்பு மிக்க மக்கள், மதிப்புமிக்க நம் உரிமைகளை சில ரொட்டித் துண்டுகளுக்காகவா விற்பது என்பது அவமான கரமானது என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ஓட்டுக்கு காசு கொடுக்கிறவன் பாவி, அந்த காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறவனை தேசதுரோகி என்கிறார் தெய்வத் திருமகன் . நமது ஐயா முத்துராமலிங்கத் தேவர். பேரறிஞ்சர் அறிஞர் அண்ணா என்னும் பெருந்தகை, தங்கத்தை யாராவது தவுட்டிற்கு விற்பார்களா என்று சொல்கிறார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் சிங்கங்கள் அல்ல…! உங்களை மட்டுமே நம்புறோம்…. யாருக்கும் பயப்பட மாட்டோம் …!!

மானாமதுரை தொகுதி திருப்புவனம் சந்தை அருகில் தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், நமக்கு தேவைப்படுவது  ஆள் மாற்றம் ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. கட்சி, ஆட்சிகளால் இதை சரி செய்ய முடியாது, புரட்சி ஒன்றால்  தான் இந்த ஆட்சி முறையை புரட்டிப் போட முடியும். அதனால் தான் உங்கள் பிள்ளைகள் தீய ஆட்சி முறையை ஒழித்து, தூய ஆட்சி முறையை மலர செய்ய… கேடுகெட்ட பணநாயகத்தை ஒழித்து , மாண்புமிக்க ஜனநாயகத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்., ஓர் கதர் அணியாத பாஜக…. பாஜக ஒரு காவி அணியாத காங்கிரஸ்… சீமான் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தான் 2, ஆனால் கொள்கைகள் ஒன்றே என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுத் தொகுதிகளில் போட்டியிட அதிக வாய்ப்பு… சீமான் பெருமிதம்…!!!

தமிழகத்தின் ஆதித்தமிழர் குடிமக்களுக்கு பொதுத் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது… சீமான் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

ஆண்டு வருமானம் ரூ.1000 தானா?…. சாரிப்பா ஒரு எழுத்து மாறிடுச்சு… விளக்கமளித்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீமான் திருவொற்றியூர் தொகுதியில் கடந்த 15ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் சொத்து விவரம் குற்றப்பின்னணி நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

காட்டுமன்னார்கோவிலில் சீமான் வாக்கு சேகரிப்பு…!!

நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் சீமான் காட்டுமன்னார்கோவிலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளர் நிவேதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க ஆட்சிக்கு வந்தால்…. ”இதை இலவசமா கொடுப்போம்” மாஸாக அறிவித்த சீமான் …!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆட்சி வரைவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவும் திமுகவும் தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டது. ஆனால் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் ஆட்சி வரைவை வெளியிட்டு வருகின்றது. அந்த ஆட்சி வரைவில், டென்மார்க்கை போன்று ஊழல் இல்லாத நிர்வாகம்  அமைக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100ரூபாயில் 40ரூபாயை எடுத்துகிறீர்கள்…. பாவப்பட்ட கூட்டமாக மாத்திட்டாங்க…. மக்களை நினைத்து சீமான் வேதனை ..!!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து விமர்சித்த சீமான், மாசம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்து கொள்வதற்கு குடும்ப தலைவிக்கு ஒரு வேலை கொடுத்தால் சம்பாதிக்க போறாங்க. நான் வேலூர் சிறையில் இருக்கும்போது பொதிகை மட்டும் தான் வரும். அதுல ஒரு விளம்பரம் வரும்… கிராம பஞ்சாயத்து திட்டத்திலே சேருங்கள், நூறு ரூபாய் வாங்கி அருகிலிருக்கும் வங்கியில் சேமித்து பணக்காரராகி விடுங்கள் என விளம்பரம் வரும். நூறு ரூபாய் வாங்கி சேமிச்சு இவர் பணக்கார ஆயிடுவாரு. அவுங்க லட்ச லட்சமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பவுடர் டப்பா…. சீப்பு, கண்ணாடி… கொண்டு போறாங்க…. எப்படி நாடு வளரும் ?

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 100நாட்கள் வேலையை 150நாட்களாக உயர்த்தியது குறித்த கேள்விக்கு, அதனால் தான் நாடு நாசமா போச்சு. வேளாண்மையை விட்டு குடிகள் வெளியேறியது காரணம் என்ன ? எங்க அம்மா விவசாயம் செய்யுறாங்க… தக்காளியை பறிக்கவோ, வெண்டைக்காயை பறிக்கவோ,  பருத்தி எடுக்கவோ, மிளகாய் பழம் பிறக்கவோ, கருத்து அறுக்கவோ ஆள் வரவில்லை. இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் தூர் வாரிய ஏரிகள் எத்தனை ?புதிதாக வெட்டிய நீர்நிலையில் எத்தனை ? நட்டு வளர்த்த மரக்கன்றுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சியை பிடிக்கணும்…! ஏன் துடிக்கிறேன் தெரியுமா ? சீமான் சொன்ன விளக்கம் …!!

கார்ப்பரேட் முதலாளி வருவதற்குள் என்னுடைய கவர்மெண்ட் வந்து விட வேண்டும் என்று நான் துடிக்கிறேன் என சீமான் தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஆடு மாடு வளர்த்தல் அரசு பணியை மாற்றுவேன் என்றது கேலி பேசியவர்கள் அவர்கள் தான். இப்போ  ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு மானியம் கொடுக்கீரர்கள். என்னிடம்  எப்படி சம்பளம் கொடுப்பேன் என்று கேட்டீர்கள் அல்லவா, இந்த மானியம் எப்படி கொடுப்பீர்கள் ? பள்ளிக்கூடம் பிள்ளைகளுக்கு பால் கொடுப்பேன் என்று சொல்கீறீர்கள்…  அது உங்கள் வீட்டு குழாயை […]

Categories
அரசியல்

இந்த ஆட்சியை ஒழிக்கணும்…! ஆவேசமான சீமான்…. பரபரப்பு பேட்டி …!!

சீமானிடம் இலங்கை படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோர நடவடிக்கை எடுப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது என்ற கேள்விக்கு, இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் சிங்களனுக்கு கை கொடுத்து அழிக்க வைத்தார்கள்.11 ஆண்டுகள் கழித்து திடீர்ன்னு சர்வதேச விசாரணை என சொல்கிறார்கள். 10வருடத்துக்கு மேலாக மத்திய அரசோடு ஆட்சியில் இருந்த போது தான் போர் நடந்துச்சு. நாங்கள் 11 ஆண்டுகளாக சர்வதேச விசாரணை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம். சும்மா வெற்றி ஒரு அறிக்கையை போட்டு ஈழத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் அறிக்கையில்… ரூ.1,00,00,000 வரை இலவசம்…! சீமான் செம அறிவிப்பு …!!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 1ரூபாயில் இருந்து 1கோடி ரூபாய்க்கான மருத்துவம் இலவசமாக இருக்கும் என சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சீமான், இலவசங்கள் அறிக்கையில்  வர வாய்ப்பு இருக்கிறதா என்றால், சரியான, சமமான, தரமான கல்வி. அறிவு வளம் என்பது ஒரு நாட்டின் மிக முதன்மையான அடிப்படை. அதை என் பிள்ளைகளுக்கு உலக தரத்திற்கு கொடுப்பேன். உலகத்தில் தென்கொரியா  தான் முதலில் இருக்கிறது. அதை தாண்டுவேன் என்கிறேன், உறுதியாக தாண்டுவேன். அதற்குரிய திட்டம் என்னிடம் இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட பணம் இல்லை… கமல் ஹெலிகாப்டரே வாங்கலாம்… சீமான் பேட்டி

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாடு தமிழர்களுக்கே என்பது என்னுடைய பிரச்சாரம் மட்டுமல்ல, அதற்கு முன்னாடி இருந்த முன்னோர்கள் சி.பா ஆதித்தனார், மா.பொ.சி  ஐயா பெரியார் அதே முழக்கத்தை வைத்தார். தமிழ்நாடு தமிழர்க்கே என்றால், ஆளுகிற  உரிமை அவர்களுக்கு தான். அயலாருக்கு இல்லை. இந்த நிலம் என் உரிமை. இந்த முறை இலவசங்கள் அறிக்கையில்  வர வாய்ப்பு இருக்கிறதா என்றால், சரியான, சமமான, தரமான கல்வி. அறிவு வளம் என்பது ஒரு நாட்டின் மிக முதன்மையான அடிப்படை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அறிக்கையை பார்க்கல…! இங்க நின்னு சண்டை போடுறேன்… ஆவேசமான சீமான் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இங்குள்ள பிரச்சனைகள். அனல் மின் நிலையம், அதானியுடைய துறைமுகம், காட்டுப்பள்ளி, பழவேற்காடு, எண்ணூர் இதையெல்லா நாசம் பண்ணுது. இதனால் தமிழ்நாடு தலைநகரம் என்பதை மறந்துட வேண்டியதுதான். மழை வெள்ள் நீர் வடிந்து கடலில் சேரும் முகதுவாரத்தை அடைத்து விட்டார்கள், சுவர் கட்டி எழுப்பி விட்டார். கடலில் 2000 ஏக்கர், நிலத்தில் 2000 ஏக்கர், ஆற்றில் 2000 ஏக்கர் என 6111 ஏக்கரை அதானிக்கு எடுத்து  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையில் காசு இல்லை..! மே2ஆம் தேதி பாப்பீங்க…. கொந்தளித்த சீமான் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், தேர்தல் வரைவு சட்டம் ஒவ்வொரும் டைம் நீங்கள்தான் முதலில் வெளியிடுகிறீர்கள். இந்த தடவை மற்ற கட்சிகள் வெளியிட்ட பிறகும் இன்னும் நாம் தமிழர்  வெளியிடாத காரணம் என்ன? என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்க்கு, காசு இல்லை, உண்மையிலேயே அதுதான். போனமுறை கொஞ்சம் முன்கூட்டியே தயாராக இருந்தோம். இப்பொழுது திடீரென்று வந்ததால் வெளியிட முடியவில்லை. அதிகார பலமும் பணபலமும் இந்த தொகுதியில் திராவிட கட்சியின் இருந்த நிலையில், நீங்கள் எந்த ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குறைகளை கேட்க வரல…! சரி செய்ய வந்து இருக்கேன்… என்னால மட்டுமே முடியும் – கெத்து காட்டிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக திருவெற்றியூர் தொகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சென்று சீமான் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த சீமான் கூறியதாவது, ” இங்குதான் மக்களுக்கு அதிக பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் நான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் நினைத்தால் விமானமே வாங்கலாம்… சீமான் கடும் விமர்சனம்…!!!

கமல் நினைத்தால் விமானமே வாங்கலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பீங்க ஈபிஎஸ்?… சீமான் அதிரடி கேள்வி…!!!

தமிழகத்தில் கடந்த ஆறு லட்சத்திற்கு மேல் இருக்கும் போது எப்படி வாசிங்மிஷின் கொடுப்பீங்க என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் தமிழர் கட்சி சீமான்… திருவொற்றியூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல்…!!!

நாம் தமிழர் கட்சியின் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் 5,000 முதல் ரூபாய் 10,000 வரை கேளுங்கள்…. சீமான் பேச்சு..!!

ஒவ்வொரு ஓட்டுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கேளுங்கள் என்று சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய காட்சிகள் தங்களது வேட்பாளர் பெயர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு தொகுதியாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பேசிய அவர் ஓட்டுக்கு யாரேனும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்?… சீமான் விளக்கம்…!!!

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது பற்றி சீமான் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக கடந்த சில […]

Categories

Tech |