விழுப்புரத்தை அடுத்த கோலியனூரிலுள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டமானது சீமான் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் விசிகவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் நம் கட்சியானது தொடர்ந்து போராடி வருகிறது. தேர்தலில் வெற்றி பெறும் […]
